பிரான்ஸ் தாக்குதல் – சீசீடிவி காணொளிக்காட்சியை அழித்துவிட கோரிக்கை

393 0

160715134448_police_secure_the_area_where_a_truck_drove_into_a_crowd_during_bastille_day_celebrations_in_nice_640x360_epa_nocreditபிரான்ஸின் நீஸ் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட பாரவூர்தி குண்டுத்தாக்குதல் சீசீடிவி காணொளிக்காட்சியை அழித்துவிடுமாறு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கோரியுள்ளபோதும் அதனை உள்ளுர் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
கட்டுப்படுத்த முடியாத பரப்புரைகளை தவிர்ப்பதற்காகவே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தம்மை பொறுத்தவரை,  வழக்கு தொடர்வதற்கான ஒரு முக்கிய ஆவணம் என்று உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14ஆம் திகதியன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது 80பேர் வரை பலியாகினர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட தமது ஆட்டிலறி படைப்பிரிவை அனுப்பவுள்ளதாக பிரான்ஸின் ஜனாதிபதி Francois Hollande அறிவித்துள்ளார்.