அரசாங்கம் நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மரண பொறியை வழங்கியுள்ளது

56 0

அரசாங்கம் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மரண பொறியை வழங்கியுள்ளதாக கோழிப்பண்ணையாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  சஞ்சீவ கருணாசாகர தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (15)  குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மரண பொறியை வழங்கியுள்ளனர்.

உற்பத்திப் பொருட்களின் தட்டுப்பாட்டினால் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. எனவே முட்டையின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் நாம் பல யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்தோம்.

இறக்குமதி செய்யப்படும் சோளம் மற்றும் சோயாவுக்கான இறக்குமதி வரியை தளர்த்தி  நிவாரணமொன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தோம்.

தொடர்ச்சியாக பல கோரிக்கைகளையும் முன்வைத்தோம். இதனுடாக முட்டையை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்ய முடியும். அந்த சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமல் இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்வது நடவடிக்கை எடுத்தது என்றார்.