ஒஸாமா பின்லேடினின் காணி தொடர்பில் முறுகல்

417 0

osamaஅல் கைடாவின் தலைவர் ஒஸாமா பின்லேடின் வசித்தும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதுமான காணி தொடர்பில் பாகிஸ்தானிய படையினருக்கும் உள்ளுர் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் சிறுவர் பூங்காவை  அமைக்கப்போவதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இடுகாட்டை அமைக்க இந்தக்காணி தேவை என்று படைத்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை படைத்தரப்பு, குறித்த காணியில் சுவர்களை அமைத்தது.
இது உள்ளுர் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2011ஆம் ஆண்டு பின்லேதின் அமரிக்க படையினரால் இந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றிலேயே அவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.