அரச வங்கிகளின் பங்குகள் பொது மக்களுக்கு…

101 0

வங்கி அமைப்பில் மூலதன மேம்பாட்டு செயல்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் 450 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இரண்டு அரச வங்கிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், இரண்டு பெரிய அரச வங்கிகளின் பங்குகளில் 20 வீதத்தை மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என இம்முறை வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, அரச வங்கிகளின் எதிர்கால நிதி நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், அரச வங்கிகளின் பிரதம அதிகாரிகள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கடுமையான விதிமுறைகள் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கிடையில், தனிப்பட்ட கடன் வாங்குபவர்களுக்கான வரம்புகள் போன்ற கடன் அபாயங்கள் மீதான கடுமையான விதிகள் உட்பட பல சீர்திருத்த நடவடிக்கைகள் சமாந்தரமாக செயல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வங்கிச் சட்டத்தின் திருத்தங்கள் இந்த சீர்திருத்தங்களுக்கான சட்ட கட்டமைப்பை வழங்கும் என்றும் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.