இஸ்ரேல் ஹமாஸ் போர் – காசாவின் தென்பகுதியில் வீதிகளில் சடலங்களும் இஸ்ரேலிய டாங்கிகளும்

112 0

காசாவின் வடபகுதியில் இடம்பெறும் கடும் மோதல்களில் இருந்து தப்பியோடும் மக்கள் வீதிகளில் இஸ்ரேலிய டாங்கிகளையும் அழுகிய நிலையில் சடலங்களையும் காண்பதாக தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களை குறிப்பிட்ட நேரங்களில் சலால் அல் டின் வீதியை பயன்படுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் துண்டுபிரசுங்கள் மூலமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

தப்பியோடும் மக்களின் பயணம் எவ்வாறானதாக காணப்படுகின்றது.

அவர்களின் பயணிக்கும் பகுதிகளில் இருந்து வெளியான வீடியோக்களை பிபிசி ஆராய்ந்துள்ளது.நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை செவிமடுத்துள்ளது.தெளிவான விபரங்களை பெறுவதற்காக செய்மதி படங்களை ஆராய்ந்துவருகின்றது.

மோதல்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காசாவில்  ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வசித்தனர்.

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் காசாவின் மீது கடுமையான குண்டுவீச்சினை மேற்கொண்டுள்ளது.

பொதுமக்களை சலால் அல் டினான் வீதியை பயன்படுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

காசாவின் தென்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்தாலும் அவர்கள் அங்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த புதன் கிழமை அகமட் ஜெயாடா தனது இடம்பெயர்வு குறித்து பிபிசியின் உள்ளுர் பத்திரிகையாளருக்கு கருத்து தெரிவித்தார்.

வடபகுதியில் உள்ள அல் நசாரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.

தனது கைக்குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் மிகவும் களைப்படைந்துள்ளோம்  என்ன செய்வது எங்கு போவது என தெரியவில்லை யாரிடம் போவது எங்களை காப்பாற்றுங்கள் என யாரிடம் தெரிவிப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.

காசாவின் வடபகுதியில் உள்ள அல்ஜெய்டவுனிலிருந்து மஹ்மூட் கஜாவி தப்பி வெளியேறியுள்ளார்

தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களே இதற்கு காரணம்.

மதியம் தனது வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ஐந்து மணித்தியாலங்களாக நடந்துகொண்டிருக்கின்றார் – எங்கு போவது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

வீதியோரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

பெரும்பாலானவர்கள் நடந்தே செல்கின்றனர் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை வாகனங்களை காசா நகரத்தின் தென்பகுதியின் எல்லையில் விட்டுவிட்டுச்செல்லுமாறு பணித்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

செல்லும் வழியில் நான் பல சடலங்களை பார்த்தேன் வீதியின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகளையும் பொதுமக்களையும் காணமுடிகின்றது ( நெட்சாரிமிற்கு அருகில்) அவர்கள் எங்களை நோக்கி வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நான் உடல்களை உடல்பாகங்களை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

டெலிகிராமில் வெளியாகியுள்ள மற்றுமொரு வீடியோவில் பெண்ணொருவர் வீதியில் உடல்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

நான் நெட்ஜாரிம் சந்தியில் எனது மகனை தேடினேன் தென்பகுதி நோக்கி செல்லும்போது வீதியில் ஏனையவர்களின் உடல்களிற்கு மத்தியில் அவரின் உடலை பார்த்தேன்  என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

நான் இஸ்ரேலிய டாங்கிகளை கண்டேன் அவற்றை நான் கவனத்தில் கொள்ளவில்லை திரும்பிபார்த்தபோது எனது மகனின் உடலை பார்த்தேன் அவரது கையடக்க தொலைபேசி உடல்களை வைத்து அவற்றை அடையாளம் கண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பிட் பெண் முதல்நாள் அல்அக்சா மருத்துவமனைக்கு சென்று தனது மகனை தேடினார் அவர் தனது மகன் இறந்துவிட்டதாக பதிவு செய்தார் அன்றே அவரது மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என உள்ளுர் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் சலா அல் டின் வீதிகளில் உடல்கள் காணப்படும் வீடியோக்கள் எவற்றையும் பார்க்கவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.