திருமலையில்10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஆணும் பெண்ணும் கைது !

120 0

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று சனிக்கிழமை (11) திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட என்.சி வீதி, திருகடலூர் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 10 கிலோ 610 கிராம் கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் மற்றும் 43 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றபட்டு சந்தேக நபர்களுடன் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.