மாரவில கடற்கரையில் மோதல் : துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்!

62 0

மாரவில வடக்கு முதுகட்டுவ கடற்கரையில் மீன் வாங்கச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து 12 போர் துப்பாக்கி மற்றும் இரண்டு வெற்றுத் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.