குற்றச்சாட்டில் கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் !

66 0

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே உள்ளிட்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.