மீண்டும் ‘சேனா’ புழு தாக்கம்!

115 0

அநுராதபுரம், மஹகனதராவ பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான சோளச் செய்கை ‘சேனா’ புழு தாக்கத்தினால் பாரிய ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முதல் சோளப்பயிர்கள் துளிர்க்கும் காலத்தில் ‘சேனா’ புழு தாக்கத்தினால் சேதம் ஏற்பட்டதாகவும், ஆனால் இந்த பருவத்தில் சோளம் சாகுபடி துவங்கி சுமார் 12 நாட்கள் ஆன நிலையில் ‘சேனா’ புழு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக சோளப் பயிர்ச்செய்கையில் ‘சேனா’ புழுக்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்தும் விவசாய திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பான நிறுவனங்கள் எதனையும் வழங்கவில்லை எனவும் சோள விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

‘சேனா’ புழுக்களினால் ஏற்படும் பாதிப்புகளால் வெற்றிகரமான அறுவடையை எதிர்பார்க்க முடியாது எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.