அப்பத்துக்கு ஆசைப்பட்டு குரங்கிடம் நீதிகேட்டு ஏமாந்த நிலை சிறுபான்மை சமூகத்துக்கு வரக்கூடாது – கிழக்கு முதலமைச்சர்

297 0

இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினர் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்தார்.

சிறுபான்மையின கட்சிகளுக்கிடையில் அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுமானால் இறுதியில் அது அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாகவே அமையும்.

தமக்குரிய தீர்வு தொடர்பில் சிறுபான்மை கட்சிகளிடையே முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் தீர்வொன்று சாத்தியமாகும் காலகட்டத்தில் இந்த முரண்பாடுகள் காரணமாக முன்வைக்கப்பட்டு தீர்வுகள் காலந் தாழ்த்தப்படுவதற்கு காரணமாக அமையும் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியில் ஒரு அப்பத்தை குரங்கின்கையில் கொடுத்து நீதிகேட்டு ஏமாந்த பூனைகளின் நிலையே சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்படும்.
ஒரு அப்பத்தை தமக்குள் இணக்கப்பாட்டிற்கு வந்து சமமாக பிரித்துக்கொள்ள முடியாமல் இறுதியில் சிறு துண்டு அப்பம் கூட கிடைக்காமல் வீடு திரும்பிய பூனைகளின் கைசேத நிலை ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.