அமெரிக்காவுடன் உறவுகளை பேணுவதற்கு எங்களிற்கு உரிமையுள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கை வம்சாவளிகளான அமெரிக்கர்களிற்கு உரையாற்றுவதற்கு தனக்குரிமையுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்காவின் அமெரிக்க விஜயம் குறித்து வெளிவந்துள்ள விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் உறவுகளை பேணுவோம் என தெரிவித்துள்ள விஜிதஹேரத் கொழும்பில் அமெரிக்க தூதுவரை நாங்கள் சந்தித்ததை கேள்விக்குட்படுத்துவதில் நியாயமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் அதற்கு முன்னரும் நாங்கள் அமெரிக்க தூதுவரை சந்தித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜேவிபி தலைவர் அமெரிக்காவின் பல நகரங்களில் உரையாற்றியுள்ளார் அங்குள்ள இலங்கையர்களுடன் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட அவருக்குசந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் விஜிதஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஜேவிபிக்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் இடையில் நல்லுறவுள்ளதாக தெரிவிப்பவர்கள் நாடாளுமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் ஏற்பட்டுவரும் உறவுகள் குறித்து அலட்சியம் செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.