நல்லாட்சி அரசாங்கத்தின் பேரில் தவறிழைக்க யாருக்கும் இடமில்லை – ஜனாதிபதி

384 0

23நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தவறிழைக்க அரசியல் வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் சவால்கள் தொடர்பில் விசேட கருத்தரங்கு கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமதர் ரணில் விக்ரமசிங்க, அனைத்து கட்சிகளும் இணைந்து அரசியல் அமைப்பை சீர்திருத்த, அரசியல் அமைப்பு குழுவொன்றுக்கு நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதற்கு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதனை தொடர்ந்து, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அத்துடன், உப குழுக்கள் 6 நியமிக்கப்பட்;டன.
இந்த கண்காணிப்பு குழுவின் மூலம் மூன்று முக்கிய பிரச்சினைகளான, தேர்தல் முறை, அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகாரம் என்பவை தொடர்பில் ஆராயப்படவுள்ளன என குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு தொடர்பில் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் காணப்படும் பயம் நாட்டை அபிவிருத்தி செய்ய தேவையான ஒன்று என குறிப்பிட்டார்.
அரச சேவை குறித்த திருப்தி கொள்ளும் நிலையில் இல்லை என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம்.
இந்த நிலையில் அரச சேவையின் பிரதிபலன்கள் நூற்றுக்கு 50 வீதமேனும் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரச தலைவரான தம்மால், தெரியாமல் தவறு இழைக்கப்படுமாயின், தமது அமைச்சரவை அது குறித்து தன்னிடம் கேள்வி எழுப்ப முடியும்.
நல்லாட்சி நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மோசமான ஆட்சியை நடத்த இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.