விளையாட்டுத்துறை அமைச்சரின் விமர்சனங்களுக்கு தேர்வாளர்கள் பதிலடி

101 0

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் விமர்சனத்தை வேடிக்கையானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது  என்றும்   தெரிவித்து இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் நிராகரித்துள்ளனர்.

அமைச்சரின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் தேர்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது 29 மாத பதவி காலத்தில், முன்னைய காலங்களைவிட அதிசிறந்த பெறுபேறுகளை இலங்கை ஈட்டியள்ளதாகத் தெரிவித்து தேர்வாளர் பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நிலைமைகளுக்கு ஏற்ப சமபலம் கொண்ட அணியையே தேர்வு செய்ததாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்வாளர்கள் குறிப்பிட்டனர்.

சில வருடங்களாக தாம் தெரிவு செய்த அணிகளும் தெரிவு விடயங்களும் அமைச்சரினால் நிராகரிக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘தேர்வுகள் தவறாக இருப்பின், அதற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரும் தவறு’ எனத் தெரிவித்து தேர்வாளர்கள் தமது அறிக்கையை முடித்துள்ளனர்