மனைவியின் தலையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்தவர் தானும் தற்கொலை

54 0

அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் தனது 30 வயதான மனைவியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 36 வயதான கணவர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது மனைவியை சுத்தியலால் தலையில் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், அந்த கணவரும் அவர்களது வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

இந்த மரணங்கள் தொடர்பான விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.