அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

144 0

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் எ.வ.வேலுவின் மகனுடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.