கோயம்பேடு சந்தையில் கடை வைத்திருப்பவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படாமல் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றுஅமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திலுள்ள அண்ணா கனி அங்காடிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில்ஆய்வு செய்தார். அப்போது அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு அங்காடியில் 86 ஏக்கரில் காய்கறி அங்காடி, மலர் அங்காடி, கனி அங்காடி மற்றும் உணவு தானிய அங்காடி என 3,941கடைகள் அமைந்துள்ளன. இதில் கனி அங்காடியில் இருக்கும் 992 கடைகள், அந்த கடைகளிலே ஏற்படுகின்ற கழிவுகள், அந்த கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க 2.5 கிமீ தொலைவுக்கு மழைநீர் கால்வாய் புதிதாககட்டவேண்டும் என பொறியாளர் கள் கூறியுள்ளனர். இருப்பினும் முதல்கட்டமாக இருக்கும் கால்வாயை தூர்வாரும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
திமுக ஆட்சி ஏற்பட்ட பின் அங்காடி மேம்பாட்டுக்காக ரூ.20 கோடிஒதுக்கப்பட்டது. அதில், நுழைவு வாயில் பொது அறிவிப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமராக்கள், உயர்மட்ட மின் விளக்குகள், சிதிலமடைந்த மின் விளக்குகளை புதுப்பித்தல் மற்றும் டிஜிட்டல் அறிவிப்புபலகைகள் பொருந்தும் பணிகள்ரூ.13 கோடியில் முடிக்கப்பட்டுள் ளன. மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.