தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வாக பாம்பனில் மீன்பிடி துறைமுகம்

318 0

தமிழக மீனவர்கள் பாக்கு நீரினையில் தாக்குதலுக்கு உட்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழகம் பாம்பனில் 60 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் புதிய மீன்பிடி துறைமுகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

பாம்பன் குந்துக்கல் கடற்பகுதியில் தமிழக கடல் வளத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கவும் மன்னார் வலைகுடா பகுதியில் ஆள்கடல் மீனிபிடியை ஊக்குவிக்கவும் இந்திய மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையின் ஒரு அம்சமாக இந்த துறைமுகம் அமைக்கப்படுகி;ன்றது.

இந்த இறங்கு தளம் அமைக்கப்படும்பட்சததில் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைந்து விடவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.