மில்கோ நிறுவனத்துக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்கவும்

118 0
மில்கோ நிறுவனத்தின் தலைவரை அந்த பதவியில் இருந்து நீக்கி அனைத்து தொழிற்சங்கங்களும் சினேகமாக பணியாற்றிச்செல்ல முடியுமான சிறந்த தலைவர் ஒருவரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மில்கோ தேசிய சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ்.ஏ.துஷார கெலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மில்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ரேணுக பிரேராவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்கி, அனைத்து தொழிற்சங்கங்களுடன் சினேகபூர்வமாக வேளை செய்துகொண்டு செல்ல முடியுமான, கலந்துரையாடல் ஊடாக  எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியுமான நிர்வாக திறமையுள்ள தலைவர் ஒருவரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மில்கோ நிறுவனத்தின் தலைவர் எமது நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களை அறிவுறுத்தாமல் சுமார் 35 வருடங்களாக மாதச் சம்பளத்துக்கு வழங்கப்படும் வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு அதிகரிப்பதை நிறுத்தி, ஒரே அளவில் வைத்துக்கொள்ள 2022 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவர் தன்னிச்சையாக தீர்மானித்துள்ளார்.

தற்போது எழுந்துள்ள நிலை தொடர்பாக  எமது தொழிற்சங்கங்கள் அவருடன் முரண்பாட்டுக்கு செல்லாமல்  எமது நிறுவனத்தின்  பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கலந்துரையாடல் ஊடாக நடவைக்கை எடுத்தோம் என்பதை எங்களுக்கு அறியத்தருகிறோம்.