லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு விலைக்குறைப்பு விபரம்!

79 0

லங்கா சதொச நிறுவனம் நேற்று புதன்கிழமை (01) முதல் அமுலுக்குவரும் வகையில் பால் மாவின் விலையை குறைக்கத்  தீர்மானித்துள்ளது.

இதன்படி,  400 கிராம் பால் மா பக்கெற்றின்  ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 948 ரூபா.

மேலும் பச்சைப்பயறு மற்றும் கடலை ஆகியவற்றின் விலைகளும்  இன்று (02) முதல் குறைக்கப்பட்டுள்ளன.

பச்சைப்பயறு ஒரு கிலோ கிராம் 77 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 998 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ  கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்  அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.