நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், 11 மாவட்டங்களில் உள்ள 62 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, இரத்தினபுரி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பல பரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.