டீசல் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்?

75 0

எதுவித பகுப்பாய்வுகளையும் மேற்கொள்ளாமல் டீசலின் விலையை இரு தடவைகள் ரூபா 15 ஆல் உயர்த்தியுள்ளமை சந்தேகத்திற்குரியது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

செப்டெம்பரில் டீசலின் விலை 10 ரூபாவினாலும், ஒக்டோபர் 31 ஆம் திகதி 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டீசலின் விலை குறைக்கப்பட்டால் போக்குவரத்து செலவு குறைக்கப்படும்.

தற்போதைய எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின் அது இரண்டு சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.

மேலும் ரூபா 10 அல்லது ரூபா 15 அதிகரிக்கப்படும்.

எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் பேருந்துக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளது என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.