ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள 7 மாகாண சபைகளில் முதலமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளார்.
இதன்படி, இந்த மாகாணங்களின் அமைச்சர்களை ஜனதாதிபதி இன்று கொழும்புக்கு அழைத்துள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில், ஜனாதிபதி அவர்களை சந்திக்க உள்ளார்.
மேல்மாகாணம், மத்திய, தெற்கு, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர்களுக்கும் மாகாண அமைச்சர்களுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் மற்றும் மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.