அமைச்சர் சந்திம வீரக்கொடிக்கு எதிராக கடும் விமர்சனம்

364 0

6066480428_568a21198a_z-720x480இலங்கையின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போதே அவர் இவ்வாறு விமர்சனத்திற்கு உள்ளானார்.
எதிர்க் கட்சிகளின் பிரதம அமைப்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு  பதிலளிக்க, அமைச்சர் சந்திம வீரகொடி வராமைக்காரணமாகவே இந்த விமர்சனம் வெளியிடப்பட்டது.
திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் தாங்கிகள் குறித்து அனுரகுமார திஸாநாயக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும் அதற்கு பதில் வழங்காத அமைச்சர், விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.
எனினும் அதற்கு பின்னர் அவர் தொடர்ந்தும் சபைக்கு சமுகமளிக்கவில்லை
இந்தநிலையில் நேற்று ஆளும்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்;மன் கிரியெல்லயும் அமைச்சரின் செயலை கண்டித்தார்.
இதன்போது கருத்துரைத்த பிரதிசபாநாயகர் திலங்க சுமதிபால, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.