அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட சர்வோதய தேசிய சம்மேளனத்தினரின், பல்லின மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தலைமை தாங்கினார்.
மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், சர்வோதய தலைவர் கலாநிதி.ஏ.ரி ஆரியரத்ன எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன