காசாவில் விமானக்குண்டுவீச்சினால் காயமடைந்த ஐந்து வயது சிறுமி தனது 18 மாத சகோதரியை வைத்தியசாலையில் சந்திப்பதை காண்பிக்கும் வீடியோ வெளியாகி காசாவின் துயரத்திற்கான சான்றாக மாறியுள்ளது.
இரண்டு பாலஸ்தீன சகோதரிகள் காசாவின் தென்பகுதியில் உள்ள ரபாவில் மீண்டும் சந்தித்துள்ளனர்.
18 மாத கைக்குழந்தையான ஜூலியை குண்டுவீச்சில் தரைமட்டமான வீடுகளின் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள எல் நஜார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அவரது ஐந்து வயது சகோதரி ஜோரி ஏற்கனவே இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அவருக்கு கிசிச்சை வழங்கிக்கொண்டிருந்தனர்.
தனது சகோதரி உயிர் தப்பியதை உணர்ந்ததும் ஜோரி எனது தங்கை எனது தங்கை என சத்தமிட்டார்.
அவர்கள் வீட்டாருடன் உணவருந்திக்கொண்டிருந்தவேளை விமானக்குண்டுவீச்சு இடம்பெற்றது என அவர்களின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
சிகிச்சையின் பின்னர் அவர்கள் காயங்கள் அதிர்ச்சிகளுடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.