சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

94 0

2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் 20, 000 ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

எதிர் வருகின்ற 2024ம் ஆண்டிற்கான பாதீட்டில் இருபதாயிரம் ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி திங்கட்கிழமை (30) புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகம், நகரசபை மற்றும் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்கட்டணம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு என பல்வேறு  எதிர்ப்புகளைத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.