சிகிரியா பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் கொக்கேயின் மற்றும் போதைப்பொருடகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் சிகிரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த மசாஜ் நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) சிகிரியா பொலிஸாரினால் சோதனை செய்யப்பட்டது .
சோதனை நடவடிக்ககையின் பின் குறித்த நிலையத்திலிருந்து 28 கிராம் 612 மில்லிகிராம் போதைப்பொருள் , 02 கிராம் 571 மில்லிகிராம் கொக்கேயின், டிஜிட்டல் தராசு மற்றும் 172,000.00 பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர் .
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சீகிரியா, எஹெலகல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் இவர் சிகிரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .