இ.போ. ச பஸ்கள், ரயில்களில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

77 0

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணித்துக் கொண்டிருரப்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால்  அவர்களுக்கான  இழப்பீட்டுத் தொகை 5  இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி இளைஞர் ஒருவர்  ரயிலில் இருந்து தவறி வீழந்து உயிரிழந்த சம்பவம் மற்றும் செப்டம்பர் 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பயணிகள் உயிரிழந்தமை ஆகிய இரு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், இதுபோன்ற சம்பவத்தில் உயிரிழப்பவர்களுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரினால்    இந்த யோசனை  அமைச்சரவையில்  முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .