ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

75 0

ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பணிப்புறகணிப்பின் காரணமாக இன்று திங்கட்கிழமை (30) மாலை திட்டமிடப்பட்ட பல அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம்  காலை முதல் பல ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமுகமளிக்காததையடுத்து, குறித்த ரயில் சேவைகளை இரத்து செய்ய வேண்டியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை மற்றும் மாலையில் இயக்கப்படவிருந்த அலுவலக ரயில்கள் உட்பட மொத்தம் 12 ரயில்கள் இந்த நிலைமை காரணமாக இதுவரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.