கணவன் தாக்கியதில் மனைவி பலி

120 0

பொலன்னறுவை ஹிங்குராக்கொட பகுதியில் கணவன் மேற்கொண்ட தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளார்.

ஹிங்குராக்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ  பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கணவன் மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த  27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில்  ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த நபர் பெண்ணை மண்வெட்டியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையும் குறித்த நபரால் மண்வெட்டியால் தாக்கப்பட்டதுடன், அவரும் ஆபத்தான நிலையில் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தின் போது  ஒன்றரை வயது குழந்தையும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் மெதிரிகிரிய பிரதேசத்தில் மறைந்திருந்த போது ஹிங்குராக்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவர் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.