அனைத்துலக இராசதந்திர கட்டமைப்பு தமிழீழம் (IDCTE) அமைப்பின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்து -சூரிச் மானிலத்தில் இளையோர்களுக்கான செயலமர்வு ஒன்று இன்று(28.10.2023) மாலை நடைபெற்றது. இச்செயலமர்வில் கணிசமானளவு சுவிஸ் வாழ் இளையோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தாயகத்திலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர் குமணன் அவர்களும். அமைதி மற்றும் இனமுரண்பாடுகளிற்கான ஆய்வாளர் சுஜீவன் அவர்களும் கலந்து கொண்டு விரிவுரையாற்றினர். தமிழின விடுதலைப் போராட்டம் தொடர்பான நியாயப்பாடுகளையும், தமிழீழத்தின் சமகால நிலவரங்கள் மற்றும் தமிழின அழிப்பின் விவரணங்களையும் பற்றி இளையோர்களுடன் கலந்துரையாடினர்.
இச்சூழமைவில் இளையோர்களை தாயகவிடுதலைப் பணியில் இணைப்பது பற்றியதானதாகவும் அமைந்திருந்தது.