நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள்(காணொளி)

332 0

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பெருக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குற்பட்ட பகுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு நுளம்புகள் அதிகமாக உள்ள பகுதியாக இனம் காணப்பட்ட மட்டக்களப்பு வெட்டுக்காடு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு பணிகள் மாநகர ஆணையாளர் வி.தவராஜா தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்ததாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று காலை மட்டக்களப்பு வெட்டுக்காடு பொதுசுகாதார பரிசோதகர் அலுவலக முன்றலில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து  இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின்போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக  அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கும் அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.