ஏராளமான புதிய சட்டங்களை இவ்வருடத்திலிருந்து அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான பதலீட்டு சட்டத்தை எதிர்வரும் மே மாதமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக யூ.ஆர்.டி. சில்வா தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 43 ஆவது நிர்வாகக் குழுவின் உத்தியோகபூர்வு நிகழ்வு நேற்று முன்தினம் இரவு கொழும்பிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.