ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடன்களை எவ்வாறு செலுத்துவது என தாம் செய்து காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த வட்டிவீதத்தை அதிகரிக்க வேண்டும் என மத்தியவங்கியின் ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அவசியமானது.
இத்தகைய நிலையை மத்திய வங்கியும், நிதி அமைச்சுமே உருவாக்கியதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.