இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக மாருத்துவப்பீட மாணவர்கள் சிலர் யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில் உள்ள பிரதேச மக்களுடன் இணைந்து அனுராதபுரம் யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில் மாலபே சைட்டம் கல்வி நிறுவனதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (26) ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாற்பட்டத்தின் கண்டன உரையை மருத்துவப்பீட மாணவன் பிரபாத் வழங்கினார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் மலபே செய்டம் திருட்டுக் கல்விக்கடையை மூடுமாறும் தகுதியற்ற மாணவர்களை பணத்துக்காக இணைத்துக்கொண்டு மருத்துவப்பட்டத்தை வழங்குகிறார்கள். நாம் இங்கு போராடுவது எதிர்காலத்தில் தகுதியற்ற வைத்தியர்கள் உருவாகிவிட கூடாது என்ற நோக்கத்திலுமாகும்.
ஓர் சமுககத்தின் முன்னேற்றதுக்கு அடிப்படையானது கல்வியாகும் அதனை இல்லாது ஒழிப்பது என்பது முழு மானிட சமூகத்துக்கும் இளைக்கும் அநீதியாகும். கல்விக்கு அநியாயம் இழைப்பது என்பது அந்த சமுகத்தில் மாணவர்களை தாழ்வு படுத்தும் ஒரு செயலாகும். இதனை எவரும் மேற்கொள்ள முடியாது. கல்வியை இழக்க செய்வது என்பது மாணவ சமுகத்தின் உரிமையை இல்லாதொழிக்கும் ஒரு செயற்பாடாகும்.
கல்வி என்பது ஒரு உரிமையாகும் அதனை ஒரு தனி நபரால் நிறுத்த முடியாது கல்வி என்பது மானிட சமுகத்தின் நீண்ட நாட்களாக ஒன்று திறக்கப்பட்ட ஒரு பொக்கிசமாகும் இதனை யாரும் விற்பனை செய்யவோ உரிமை கோரவோ முடியாது. கல்வியின் மூலம் ஒரு தனி நபர் இலாபம் அடையவோ முடியாது கல்விக்காக பலர் பல்வேறு முயற்சிகளை செய்து வளர்த்து வந்துள்ளனர். அத்துடன் ஏராளமான நல்ல மனிதர்கள் உயிர் தியாகமும் செய்து உள்ளனர்.முழுமையான கல்வி அறிவு இல்லாமல் மனிதர்கள் அபிமானத்துடன் வாழ முடியாது இது தான் உண்மையான கதையாகும் கல்வியை பணத்துக்கு விற்பனை செய்வது என்பது ஒரு சாராருக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கும் ஒரு செயற்பாடாகும் பண வசதி உள்ள்ளவர்கள் மட்டும் கல்வி பயிலவும் ஏனையவர்கள் பாதிப்படைய செய்வதும் அநியாயமாகும்
பணத்துக்கு விற்பனை செய்வது என்பது பணம் படைத்தவர்களுக்கு மாத்திரம் வழங்கும் ஒரு சலுகையாகும். இது சுகாதார துறைக்கு பாதிப்படைய செய்யும் ஒரு செயல்பாடாகும். மாலபே போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையின் மூலம் தற்பொழுது காணப்படும் நோய்களின் தாக்கத்தை விட கூடுதலான நேயாளிகள் பாதை பாதையாக, பஸ் பஸ்சாக பணம் திரட்டும் நடவடிக்கைகள் தான் அதிகரிக்கும். நாங்கள் கோஷம் இடுவது கல்வியின் உரிமைக்காகவும் அதனை பாதுகாக்கவும் ஆகும் இந்த அரசாங்கத்துக்கு ஒரு கொள்கை இல்லாமல் இருக்கிறது அவர்களின் கொள்ளகை கல்வியை விற்பனை செய்வதாகும் பாதை பாதையாக சென்று கல்வியின் உரிமையை பாதுக்கக்கவே நாங்கள் செயற்படுகின்றோம் எங்கள் வேண்டுகோள்களை செவியேற்கா விட்டால் இதனை விட வித்தியாசமான நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும். சைட்டம் நிறுவனம் பணம் சம்பாரிக்கும் ஒரு நிறுவனமாகும் இதில் கல்வி கற்க எந்த கல்வி தகமையும் தேவையில்லை 120 இலச்சம் பணம் இருந்தால் அதுவே போதுமானது பணம் உழைப்பது தான் சைட்டம் நிறுவனத்தின் நோக்கமாகும் இது சமுக சேவைகள் சட்டத்தின் கீழ் உயர் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்படுள்ள்ளது இதில் எந்த சலுகையும் இலாபமும் இல்லை நெவில் பெர்னாண்டோவின் இத் திட்டமானது பணம் உழைப்பதாகும். அவர் ஊடகத்துக்கு வந்து சொல்வது அனைத்தும் போய் ஆகும் சைட்டம் எனும் திருட்டு தனமான பட்ட படிப்பு கடையை உடனடியாக மூடுமாறு கேட்டு கொள்கிறோம்
கல்வியும் சுகாதாரமும் பணத்துக்கு விற்கப்படும் போது அதன் தரம் குறைவடையும் இவாறான செயற்பாடுகளின் மூலம் கல்வியின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது சைட்டம் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதை கண்டு ஏனைய நிறுவனங்களும் இவ்வாறான திருட்டு தனமான பட்ட மேற்படிப்புகளை மேற்கொள்வதற்காக காத்து கொடிருக்கிறது எனவே சைட்டம் நிறுவனத்தை தடை செய்து கல்வி சுகாதார உரிமைகளை பாதுக்காபோம்
என்று கண்டன உரையில் கூறியிருந்தார்.