மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
பென்தர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப நாட்டு நலன் கருதி செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.