வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது

262 0
வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
மத்திய வங்கி முறி மோசடி காரணமாக ஊழியர் சேம லாப நிதியத்திற்கு பாரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் விவசாயிகள் மட்டுமல்லாது, மத்திய வர்க்கத்தினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்