விமான நிலையில் அபிவிருத்தி பணிகள் இறுதி கட்டம்

290 0

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எய்தியுள்ளது.

விமான நிலையத்தின் பிரதான கட்டுமான பொறியியலாளர் காரியாலயத்தின் தகவல் படி, விமான ஓடு பாதையின் பணிகளும், நவீன தொழினுட்ப ரீதியான சமிஞ்ஞை கட்டமைப்பும் தற்போது பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திட்டமிட்டதன் அடிப்படையில் எதிர்வரும் 5 ஆம் திகதியளவில் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முழுமையாக நிறைவு பெறும் எனவும், மறுதினத்திலிருந்து விமான சேவைகள் வழமைபோல இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் அங்கு அபிவிருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 720 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.