கோவில்பட்டி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

522 0

sivasuriya_2942346fகோவில்பட்டி பள்ளி மாணவர், தேசிய விஞ்ஞானி விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அப்துல்கலாம் பவுன்டேஷன், ரஷ்யன் கலை மற்றும் அறிவியல் அமைப்பு சார்பில் இளம் விஞ்ஞானிக்கான தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வுக்கு அகில இந்திய அளவில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புகளை பதிவு செய்தனர். இதில், 90 மாணவர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

இவர்களில், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவசூர்யா, சூரிய ஒளி பேட்டரியில் இயங்கும் சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய டிராக்டரை வடிவமைத்து தேர்வுக்கு சமர்ப்பித்தார்.

இவரது படைப்பு முதலிடம் பெற்று, இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் முன்னாள் கமாண்டர் ராகேஷ் சர்மா விருதை வழங்கி பாராட்டினார்.

மாணவர் சிவசூரியா இதே படைப்புக்காக ஏற்கெனவே பல்வேறு பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார். சிவசூர்யாவுக்கு ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.