கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பொன்னாவெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள வலைப்பாடு கிராமத்தில் உள்ள கடற்கரை பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, நேற்று வியாழக்கிழமை (19) வலைப்பாடு கிராமத்தில் 10 ஆயிரம் பனை விதை நடப்படும் செயற்பாடு ஆரம்பமானது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘சுற்றுச்சூழல் அபாயங்களை தடுக்க இயற்கை வளங்களை பாதுகாத்தல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நடுகை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, பணியாளர்கள் மற்றும் பனை அபிவிருத்தி மாவட்ட முகாமையாளர் பார்த்தீபன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுதாகரன், பூநகரி சமாசம் தலைவர் பிரான்சிஸ், பூநகரி சமாசம் கிராமிய வங்கி முகாமையாளர், வலைப்பாடு அன்னம்மாள், கடற்தொழில் கூட்டுறவு சங்க தலைவர் பெனடி, மாதர் சங்க நிர்வாகத்தினர், மெசிடோ பெண்கள் குழுவினர் மற்றும் கடற்தொழில் கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.