முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றாக காணப்படுகின்ற பரந்தன் பகுதியிலும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. உணவகங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகள் வழமைப்போல் செயற்பட்டன.
அதேவேளை உள்ளூர் குறுந்தூர பேருந்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினுடைய பேருந்துகளின் போக்குவரத்துகளும் நடைபெறுகின்றன.