பதுளை – மொரஹெலை பிரதான வீதியின் உல்பாத்தை சந்தியில் இ.போ.ச பஸ் ஒன்று 40 அடி பள்ளத்தில் வீழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.
மீகஹகிவுல்லையில் இருந்து மொரஹெலை பிரதேசத்தை நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் மீகஹகிவுல்லை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.