யேர்மனியின் தலைநகர் பேர்லினில் நேற்று புதன்கிழமை இரவு பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 174 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 65 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் என்று யேர்மன் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நியூகோல்ன் (Neukölln) மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், கலைந்து செல்லும் உத்தரவுக்கு இணங்காத போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சில பங்கேற்பாளர்கள் பைரோடெக்னிக்குகளைப் பயன்படுத்தினர், தடுப்புகளுக்கு தீ வைத்தனர் மற்றும் கற்கள் மற்றும் போத்தில்களை காவல்துறையினர் மீது வீசினர் என சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் போது பல வாகனங்கள் மற்றும் ஒரு மரமும் தீப்பிடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க காவல்துறையினர் தண்ணீர் பீச்சிகளைப் பயன்படுத்தினர். பல சிறிய தீவிபத்துகளை எதிர்கொண்டதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, யேர்மனி இஸ்ரேலில் போர்க் குற்றங்களுக்கு வெளிப்படையாக ஆதரவை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கு வீதிக்கு இறங்கிப் போராடும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்களை இந்நாடுகள் காவல்துறையை வைத்து ஒடுக்கி வருகின்றன. போராட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. சடங்களை இயற்றுகின்றன.