அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க மக்களிற்கான தொலைக்காட்சி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஹமாசும் புட்டினும் வேறுவேறு ஆபத்துக்கள் ஆனால் அவர்களிற்கு பொதுவான குணாதிசயம் உள்ளது அவர்கள் இருவரும் அருகில் உள்ள ஜனநாயகத்தை அழிக்கப்பார்க்கின்றனர் என பைடன் தெரிவித்துள்ளார்.
புட்டின் உக்ரைனின் இருப்iபே நிராகரிக்கின்றார் அவ்வாறான நாடு ஒருபோதும் இருந்ததில்லை என்கின்றார் என குறிப்பிட்டுள்ள பைடன் இஸ்ரேலும் உக்ரைனும் வெற்றிபெறுவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானது என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பிற்கான நிதியை வழங்குமாறு அமெரிக்க காங்கிரசை கோரப்போவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.