சர்வதேச நாணய நிதிய கடன் வசதி : ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது !

86 0

சர்வதேச நாணய நிதிய கடன் வசதியின் முதலாவது மீளாய்வு குறித்த பொருளாதார கொள்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள் ஆகியோர் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதிய ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஆதரவு திட்டத்தின் முதல் மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் மதிப்பாய்வுக்கு அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு  SDR 254 மில்லியன் (சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியுதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.