சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்னாண்டா கர்சா (Maria Fernanda Garza) நேற்று புதன்கிழமை (18) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மரியா, நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இவரது விஜயத்தின் போது, நாட்டின் சுற்றுலாத்துறை, பொருளாதார முன்னேற்றம் என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்னாண்டா கர்சாவை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
மரியா பெர்னாண்டா கார்சா ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் “நிலையான நகரமயமாக்கல்” பற்றிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.
சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.