கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மற்றைய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.