இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் தாக்கத்தால் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், கடந்த வாரம் வெளிநாட்டு சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உள்ளூர் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் இந்த வாரம் 1,820 டொலரில் இருந்து 1,925 டொலராக அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 7,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 173,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதே அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.