கடவத்தை பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரை சுட்டுக்கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சந்தேக நபர்களை கைத்துப்பாக்கியுடன் களனி குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்து போது ராகம சந்தியில் வைத்து களனி குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இருவரிடமிருந்து 7 துப்பாக்கி ரவைகளுடன் கைத்துப்பாக்கியையும் குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.