காசாவின் 84000 கர்ப்பிணிபெண்களுக்கு ஆபத்தான நிலை!

65 0

ரபா எல்லையில் காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் சிக்குண்டுள்ளதால் காசாவின் 84000 கர்ப்பிணிபெண்கள் ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

காசாவிற்குள் விநியோகங்களை கொண்டுவரமுடியாததால் 84000 கர்ப்பிணிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் சிஎன்என்னிற்கு  தெரிவித்துள்ளது.

ரபா எல்லையின் எகிப்திய பக்கத்தில் மூன்று இலட்சம் மக்களிற்கு போதுமான அடிப்படை பொருட்கள் சிக்குண்ட நிலையில் உள்ளன உலக சுகாதார ஸ்தாபனத்தின்  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தரைவழிப்பாதையை திறப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம்  எகிப்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்த போதிலும் இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சுக்கள் அதனை சாத்தியமற்றதாக்கியுள்ளன.